இலங்கையில் காத்திருக்கும் 50 ஆயிரம் பேர்... உயிரிழக்கும் அபாயத்தில் பலர்

இலங்கையில் காத்திருக்கும் 50 ஆயிரம் பேர்... உயிரிழக்கும் அபாயத்தில் பலர்

இலங்கையில் உள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய 50 ஆயிரம் நோயாளிகள் 2028 ஆம் ஆண்டு வரை காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் காத்திருக்கும் 50 ஆயிரம் பேர்... உயிரிழக்கும் அபாயத்தில் பலர் | 50 Thousand Cardiac Patients Waiting In Sri Lanka

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 5 பிரதான விடுதிகளில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சத்திரசிகிச்சைகள் தாமதமாவதால் பல நோயாளிகள் மரணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார்.

மேலும், இதய அறுவை சிகிச்சைக்காக தற்போதுள்ள வரிசையை முடிவுக்கு கொண்டு வர குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும் என்றும், இதுபோன்று நேரம் கடந்தால், பல நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காத்திருக்கும் 50 ஆயிரம் பேர்... உயிரிழக்கும் அபாயத்தில் பலர் | 50 Thousand Cardiac Patients Waiting In Sri Lanka

இதேவேளை, தற்போது நிலவும் சூழ்நிலையில் இதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக தனியாருக்குச் செல்லும்போது பெரும் தொகையை செலுத்த வேண்டியிருப்பதால், காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேவைப்படுபவர்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும் என்றும் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.தனியார் கல்வி நிலையத்தில் மாளவிக்காவின் தொடை பற்றி விளக்கம் கொடுத்த ஆசிரியர்

யாழ்.தனியார் கல்வி நிலையத்தில் மாளவிக்காவின் தொடை பற்றி விளக்கம் கொடுத்த ஆசிரியர்

இல்லாவிடின் விசேட நோய்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வைத்திய காப்புறுதி முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது இன்றியமையாததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.