முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவில் (india) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன.
இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் முட்டை
கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40 ரூபாவிற்கு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்
யாழில் (jaffna) சீரற்ற வானிலை மற்றும் நோய் தாக்கத்தினால் வெங்காய உற்பத்தியில் உரிய விளைச்சலை பெற முடியாது போயுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தளம் Google AdSense தொடர்புடைய விளம்பர இணைப்புகளைப் பயன்படுத்துகிறது. AdSense தானாகவே இந்த இணைப்புகளை உருவாக்குகிறது. இவை கிரியேட்டர்கள் வருமானம் ஈட்டுவதற்கு உதவக்கூடும்.
வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 200 தொடக்கம் 250 ரூபா வரை விற்றால் மட்டுமே விவசாயிகளால் இலாபம் காண ஏழும்.
இருப்பினும், சந்தையில் வெங்காயம் கிலோவுக்கு 100 தொடக்கம் 150 ரூபா மாத்திரமே விற்கப்படுகின்றது இதனால் பெருமளவு நட்டத்தை விவசாயிகள் எதிர் நோக்குகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.