கார்த்தியின் 'கைதி' திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்!

கார்த்தியின் 'கைதி' திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான திரைப்படம் ’கைதி’. இந்த படம் வெளியான அதே தினத்தில் தான் தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும் வெளிவந்தது. பிகில் படத்துடன் வெளிவந்தாலும் ’கைதி’ திரைப்படம் முதல் நான்கு நாட்களில் சுமாரான வசூலை தந்தது. ஆனால், ஐந்தாவது நாளில் இருந்து பிக்கப் ஆகி மிகப்பெரிய வசூலை கொடுத்தது. மேலும் திரையரங்குகளில் காட்சிகளும் ஐந்தாவது நாளுக்கு பின் அதிகமானதால் தயாரிப்பாளருக்கு மட்டுமன்றி திரையரங்கு உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நல்ல லாபத்தை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் மாபெரும் வெற்றியால்தான் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இயக்குனர் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. மேலும் ‘கைதி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாகவும், கார்த்தி வேடத்தில் அஜய்தேவ்கான் நடிக்கவிருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. .

இந்த நிலையில் தற்போது ‘கைதி’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய கெளரவம் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படம் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கார்த்தி, லோகேஷ் கனகராஜ், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது