கிளிநொச்சியில் பயங்கர விபத்து... யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சியில் பயங்கர விபத்து... யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சியில் யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் இன்றையதினம் (06-09-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் பயங்கர விபத்து... யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் வைத்தியசாலையில்! | Man Injured Hit By A Yal Rani Train In Kilinochchi

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த நபர் கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் ரயில் கடவையை கடக்க முற்பட்டபோதே யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயலில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கிளிநொச்சி உமையாள்புரத்தைச் சேர்ந்த 58 வயதான சுப்பையா சாந்தகுமார் என்பரே படுகாயமடைந்துள்ளதாக் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் பயங்கர விபத்து... யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் வைத்தியசாலையில்! | Man Injured Hit By A Yal Rani Train In Kilinochchi

படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.