அதிகரித்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (05) இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 59 சதம் என குறிப்பிடப்பிட்டுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 71 சதம், விற்பனைப் பெறுமதி 400 ரூபா 79 சதம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 338 ரூபாய் 01 சதம் என குறிப்பிடப்பிட்டுள்ளது
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 361 ரூபாய் 39 சதம் ஆக பதிவிடப்பட்டுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 47 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 15 சதம் என குறிப்பிடப்பிட்டுள்ளது.