சுஷாந்த் தற்கொலைக்கு நான் காரணமா? காதலி ரியாவின் அதிர்ச்சி வீடியோ

சுஷாந்த் தற்கொலைக்கு நான் காரணமா? காதலி ரியாவின் அதிர்ச்சி வீடியோ

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தற்கொலை குறித்து போலீசார் இதுவரை 40 பேரிடம் விசாரணை செய்து உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சுஷாந்த் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பீகாரில் ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த வழக்கு வரும் 5ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது

சுஷாந்தின் மன அழுத்தத்திற்கு ரியா தான் காரணம் என்றும், சுஷாந்துக்கு அவர் நெருக்கடி கொடுத்ததோடு ஒரு கட்டத்தில் மிரட்டியுள்ளதாகவும் மன உளைச்சலில் சிகிச்சை எடுத்து கொண்டிருந்த சுஷாந்தை தனியே விட்டு அவர் பிரிந்து சென்றது மட்டுமின்றி அவரிடம் இருந்த அனைத்து பொருட்களையும் ரியா கைப்பற்றி உள்ளார் என்றும், சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து ரியாவின் வங்கி கணக்கிற்கு 15 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் ஆகி இருப்பதாகவும் சுஷாந்தின் தந்தை தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இது குறித்து ரியா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கடவுள் மீதும் நீதியின் மீது நம்பிக்கை உண்டு என்றும் தான் இந்த பிரச்சனையில் இருந்து நிச்சயம் மீண்டு, வெளியே வருவேன் என்று நம்புவதாகவும் நீதி தனக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர் கூறியுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆனால் ரசிகர்கள் இந்த வீடியோவை நம்பத் தயாராக இல்லை. அவர் நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும் சுஷாந்தின் மன உளைச்சலுக்கு அவர்தான் காரணம், அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் தனது வழக்கு விசாரணை செய்யப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே இந்த வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்றும் ரியா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் தனது சார்பில் வாதாடுவதற்காக தினமும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் வழக்கறிஞரை அவர் நியமனம் செய்ததாகவும் கூறப்படுகிறது

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது மொத்தத்தில் சுஷாந்தின் தற்கொலைக்கு ரியாதான் முழு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அதிகரித்து வருவதாக பிரசாந்தின் தந்தை மற்றும் சகோதரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது