யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு புதிய விமான சேவை: மகிழ்ச்சி தகவல்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து மதுரைக்கு வாரத்தின் ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த நடவடிக்கையானது இலங்கை விமான சேவை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக இந்தியாவிலிலுள்ள (india) தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை விமான சேவை அமைச்சகத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மதுரை - கொழும்பு இடையே முதல் சர்வதேச விமான சேவை கடந்த செப்டம்பர் 2012ல் இடம்பெற்று வருகின்றது.
தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ ஏர்லைன்ஸ் (தினசரி) மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) வழங்கி வருகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்தத் தளம் Google AdSense தொடர்புடைய விளம்பர இணைப்புகளைப் பயன்படுத்துகிறது. AdSense தானாகவே இந்த இணைப்புகளை உருவாக்குகிறது. இவை கிரியேட்டர்கள் வருமானம் ஈட்டுவதற்கு உதவக்கூடும்.
இந்த விமானம் 52 பயணிகளுடன் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சென்னையிலிருந்து வந்த பயணிகளுக்கு மங்கல வாத்தியகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.