தென்னிலங்கையில் நடந்த கொடூரம் ; மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

தென்னிலங்கையில் நடந்த கொடூரம் ; மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையில் நடந்த கொடூரம் ; மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் | The Husband Killed His Wife With An Axe Colomboஉயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்