அரச ஓய்வூதியர்களுக்கான மொட்டு வெளியிட்டுள்ள நற்செய்தி

அரச ஓய்வூதியர்களுக்கான மொட்டு வெளியிட்டுள்ள நற்செய்தி

அரச சேவையில் பணிபுரியும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தற்போதுள்ள சம்பள நிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) “வளர்ந்த நாடு உங்களுக்கானது” என்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) காலை கொழும்பில் (COlombo) வெளியிடப்பட்டது.

இதன் படி, குறித்த விஞ்ஞாபனத்தில் பின்வரும் சலுகைள் அறிவிக்கப்பட்டுள்ளது, “இளைஞர் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சமூகத்தை மரியாதையுடன் ஆதரிக்க ஒரு ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தொடர்ந்து சேவை செய்யக் கூடிய சிரேஷ்ட  பிரஜைகளுக்கு  மாதாந்திர கொடுப்பனவு பெறுவதற்கு ஒரு தன்னார்வ சேவைக் குழு நிறுவப்படும்.

அரச ஓய்வூதியர்களுக்கான மொட்டு வெளியிட்டுள்ள நற்செய்தி | Pension Of Govt Pensioners Will Be Increased Slpp

அரச சேவையில் பணிபுரியும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தற்போதுள்ள சம்பள நிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்படும்.

அவர்களின் நிலையான வைப்புகளுக்கு சந்தைசராசரி வட்டியை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது.

இச்சமூகத்திற்கு தற்போதுள்ள காப்பீடு மற்றும் இதர சலுகைகள் அதிகரிக்கப்படும்''