தகாத உறவால் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்; பொலிஸார் அதிர்ச்சி

தகாத உறவால் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்; பொலிஸார் அதிர்ச்சி

பசறை வீதி ஹிந்தகொட பகுதியில் பெண் ஒருவர் மீது, கணவன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது. 35 வயதுடைய குறித்த பெண்ணின் கணவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இந்நிலையில், பெண்ணின் தகாத உறவே துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தகாத உறவால் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்; பொலிஸார் அதிர்ச்சி | Husband Shoots His Wife For Having An Affairஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கரகஹ உல்பத, நவஜனபதய, ஹகுன்னாவ, வெலிமடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

காயமடைந்த பெண் பதுளை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.