உலகளவில் மிகவும் பிரபலமான 10 சமூக வலைதளங்களின் பட்டியல்! முதலிடம் எது..
உலகளவில் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்களின் பட்டியல் விபரம் வெளியாகியுள்ளது.
DataReportal இன் சமீபத்திய தரவுகளின்படி, உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.
கூடுதலாக கடந்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இருந்து புதிதாக 97 மில்லியன் பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதன் காரணமாக இணையப் பயனர்களின் எண்ணிக்கை 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வாறான நிலையில் உலக அளவில் அதிய பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகப்புத்தகம் (Facebook) தொடர்ந்து முதலிடத்திலுள்ளதாக DataReportal இன் சமீபத்திய தரவுகளில் தெரியவந்துள்ளது.