செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு | Special Notice Distribution Of Ballot Cards

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் வீட்டிலேயே தங்கி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.