வைத்தியசாலையில் உயிரிழந்த மனைவி! வீட்டை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வைத்தியசாலையில் உயிரிழந்த மனைவி! வீட்டை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரத்தினபுரி பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (21-08-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வைத்தியசாலையில் உயிரிழந்த மனைவி! வீட்டை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Husband Attacked His Wife And Son Deaths Ratnapura

மேலும் இந்த கொலை குடும்ப தகராறு காரணமாக நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவான வீதி, தேல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி மற்றும் 18 வயதுடைய மகன், 08 வயதுடைய மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

வைத்தியசாலையில் உயிரிழந்த மனைவி! வீட்டை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Husband Attacked His Wife And Son Deaths Ratnapura

இவ்வாறான நிலையில் நேற்றிரவு குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி, மற்றும் மகனை  கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி மற்றும் மகன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பின்னர், பொலிஸார் வீட்டைச் சோதனையிட்ட போது, ​​சந்தேக நபரான 48 வயதுடைய கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.