மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு

மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. 

இந்தியா ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் நேற்று (21.08.2024) பாரிய வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் சிக்குண்டு இதுவரையில் 17 வரையில் உயிரிழந்ததுடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், பலர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.