உயிருக்குப் போராடிய இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்

உயிருக்குப் போராடிய இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்

  பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இடம்பெற்றதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனொருவரே காப்பாற்றப்பட்டுள்ளார்.

உயிருக்குப் போராடிய இளைஞனை காப்பாற்றிய பொலிஸார் | Police Saved Boy Who Was Fighting For His Life

குறித்த இளைஞன் நேற்று திங்கட்கிழமை (19) மாலை பாணந்துறை கடலுக்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் உடனடியாக இளைஞனைக் காப்பாற்றி முதலுதவி அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.