தென்னிலங்கையில் கோர விபத்து ; ஸ்தலத்தில் மூவர் பலி

தென்னிலங்கையில் கோர விபத்து ; ஸ்தலத்தில் மூவர் பலி

திவுலபிட்டய – நீர்கொழும்பு வீதியில் துனகஹ நகரில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து இன்று (15) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திவுலப்பிட்டியவில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று கொதிகமுவ பகுதியில் இருந்து துனகஹா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையில் கோர விபத்து ; ஸ்தலத்தில் மூவர் பலி | Gora Accident In South Lanka Three Killed

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மற்றொரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என திவுலபிட்டிய பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.