இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(15.08. 2024)  இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (15.08.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான தகவல் | Dollar Rate In Sri Lanka Today 15 08 2024

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 222.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை  213.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.14 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  391.35 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  376.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.