இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை

 இலங்கையில் தங்க விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அண்மையில் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது நேற்றும் இன்றும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கின்றது.

இன்றைய (15) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 735,266 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை | Today Gold Price For Happy Peoples In Srilanka

அத்துடன் 24 கரட் தங்க கிராமின் விலையானது  25,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 207,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம்  23,780 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் 190,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  22,700 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்  181,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்  199,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

 22 கரட் தங்கப் பவுண்  ஒன்று 184,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.