மனைவியை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற கணவன்; பகீர் சம்பவம்!

மனைவியை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற கணவன்; பகீர் சம்பவம்!

  நபர் ஒருவர் மனைவியை தாக்கி அவரது கால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அரங்கேறிய இக் கொடூர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ராஜஸ்தான் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேம் ராம் மெக்வால் என்பவர் (வயது 40), இந்த செயலை செய்துள்ளார்.

மனைவியை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற கணவன்; பகீர் சம்பவம்! | Husband Dragged His Wife On A Motorcycle

தன் மனைவியை சாலையில் இழுத்துச் சென்று போது அதை பார்த்தவர்கள் வேடிக்கை பார்த்தனரே தவிர அப்பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை. அவர்கள் அனைவரும் அலைபேசியூடாக காணொளி எடுத்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில்,

சம்பவத்தை தடுக்காமல் படம் பிடிப்பதில்ஆர்வம் காட்டியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்பெண் தனது சகோதரி வீட்டுக்கு செல்ல விரும்பியதால் அவருக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

அதேவேளை குறித்த நபர் அப்பெண்ணை 10 மாதங்களுக்கு முன் ரூ.2 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது,