பிறப்புச் சான்றிதழைப் பெற தந்தை சென்ற நேரம் தாயும் குழந்தைகளும் மரணம்; காசாவில் துயரம்
காஸாவில் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழைப் பெற தந்தை சென்ற நேரம், இஸ்ரேலின் விமான தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகளின் பிறப்புப் பத்திரங்களை எடுத்து வருவதற்காக தந்தை அரசாங்க அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது விமான தாக்குதலில் குழந்தைகளும், தாயும் உயிரிழந்துளனர் .
அஸர் (Asser) என்ற ஆண் குழந்தையும், அய்ஸெல் (Ayssel) என்ற பெண் குழந்தையும் பிறந்து 4 நாள் ஆகியிருந்தது.
இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் அந்தத் தாக்குதலில் குழந்தைகளின் தாய் மற்றும் பாட்டியும் உயிரிழந்துள்ளார்.
"என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் வீட்டின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடந்ததாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது" என்று குழந்தைகளின் தந்தை கூறினார்.
தமது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடக்கூட தனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதாக தந்தை கண்ணீர்விட்டழுத்துள்ளார் .
அதேவேளை இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில், போரில் 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காஸாவில் இயங்கும் ஹமாஸ் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.