இலங்கையில் நாயினால் வந்த சோதனை - வங்கியில் இருந்து பெருந்தொகை பணம் மாயம்
காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக ஒருவர் இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
இதனையடுத்து காலியில் உள்ள ஒருவர் நாய்க்குட்டியை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து நாய்க்குட்டிகளின் உரிமையாளர் போல் நடித்த நபரை அழைத்துள்ளார்.
இதன்போது 20000 ரூபாய் முன்பணம் தேவை எனவும் வங்கி கணக்கு எண் வழங்கியுள்ளார். அதற்கமைய, நாய் வாங்குபவர் இருபதாயிரம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.

பணத்தை வைப்பு செய்த பிறகு, நாயின் உரிமையாளர் மீண்டும் அழைத்து, OTP உடன் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும் என கூறினார்.
அந்த எண்ணைக் கொடுத்த மூன்று நிமிடங்களில், நாய் உரிமையாளர், கொள்வனவாளரின் கணக்கில் இருந்து மூன்று முறை 172,280 ரூபா பணத்தை எடுத்துள்ளார்.