மனைவியிடம் கூட கூறாமல் நண்பர்களுடன் மலையேற சென்ற கணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி!
அம்புலுவாவ மலைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

4 பேர் கொண்ட குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தபோதே, அவர்களில் ஒருவர் மீது கற்பாறை வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தெஹியோவிட்ட முருத்தெட்டுவே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளின் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணகள் மேற்கொண்ட போது, விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் மனைவியிடம் கூறாமல் தனது நான்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்