கொழும்பில் வெளிநாட்டவர்கள் மோதல்

கொழும்பில் வெளிநாட்டவர்கள் மோதல்

கொழும்பு(colombo) வாதுவ பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த சீன (china)பிரஜைகள் இருவரை ஹோட்டலில் வைத்து தாக்கி விடுதியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நேபாள (nepal)பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டதாக வாத்துவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேபாளத்தைச் சேர்ந்த பதக் அனிஷ் மற்றும் ஆச்சார்யா கல்யாண் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, நேபாள நாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர், சீனப் பிரஜைகள் குழுவுடன் உரையாடிய பின்னர் அவர்களைத் தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தினர்.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.