இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவை!

இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவை!

இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பகல் மற்றும் இரவு சேவையாக, விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேருந்து சேவை கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவை! | Special Bus Service By Sri Lanka Transport Boardஅதன்படி கண்டி மாவட்டத்தை உள்ளடக்கி 438 பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளது. 

மேலும், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், கேகாலை, கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து 100 மேலதிக பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.