யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற ஐவர் கைது
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ். சாவகச்சேரி காவல் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் நேற்றைய தினம் (08) மூன்று டிப்பர் வாகனங்களும் மற்றும் நேற்று முன்தினம் (07) இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஐந்து சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.
சாவகச்சேரி காவல் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் தலைமையில் குறித்த அதிரடி நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் (08) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னலைப்டுத்தப்பட்ட நிலையில் ஒருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.