தமிழ் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: இளைஞர் ஒருவர் கைது

தமிழ் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: இளைஞர் ஒருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) இரு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த செவ்வாய்கிழமை வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை காணவில்லை என அதன் உரிமையாளர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைபட்பாடு தொடர்பில் வவுனியா தலைமைக் காவல்துறை பொறுப்பதிகாரியின்  வழிகாட்டலில் உப காவல்துறை பரிசோதகர் அகமட் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: இளைஞர் ஒருவர் கைது | Mullaitivu Youth Arrested For Motorcycle Theftஇதன் போது மல்லாவியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அதன்படி, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

தமிழ் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: இளைஞர் ஒருவர் கைது | Mullaitivu Youth Arrested For Motorcycle Theftதொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் விடப்பட்ட நிலையில் காணமல்போன மோட்டார் சைக்கிளும் மல்லாவியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இரு மோட்டார் சைக்கிள்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்