உலகிலேயே விலையுயர்ந்த ருத்ராட்சம் : எது தெரியுமா !

உலகிலேயே விலையுயர்ந்த ருத்ராட்சம் : எது தெரியுமா !

உலகில் விலையுயர்ந்தாக கருதப்படும் இந்த ஒரு முக ருத்ராட்சத்தின் மதிப்பு இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.  

ருத்ராட்சம் த்ராக்ஷ் என்னும் மரத்தில் இருந்து கிடைக்கின்ற நிலையில் இந்த மரத்தை அனைத்து இடங்களிலும் பார்த்து விட முடியாதென்பதும் அதன் சிறப்பம்சமாகும்.

இந்தநிலையில், ஒரு முகம் முதல் 21 முகம் வரை ருத்ராட்சம் உள்ள நிலையில் இந்த மரம் நேபாளம், பர்மா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் ஏராளமாக காணப்படுவதுடன்  இந்தியாவிலும் பல மலைப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், இதில் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுவதுடன்  இதை அணிவதன் மூலம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் என்றும் மற்றும் மன அமைதி கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

உலகிலேயே விலையுயர்ந்த ருத்ராட்சம் : எது தெரியுமா ! | World Most Expensive Powerful Ebony Rudraksha Mala

ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளவர்கள் இந்த ஒரு முக ருத்ராட்சத்தை அணிய அறிவுறுத்தப்படுவதுடன் பெரும்பாலும் பலரும் உபயோகப்படுத்தும் ருத்ராட்சம் மூன்று முகம், ஐந்து முகம், ஆறு முகம் மற்றும் ஏழு முகம் கொண்டதாக இருககுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அரிய வகையாக பார்க்கப்படும் ஒரு முக ருத்ராட்சம் பெரிதாக யாருக்கும் கிடைத்து விடாதெனவும் உலகில் விலையுயர்ந்தாக கருதப்படும் இந்த ஒரு முக ருத்ராட்சத்தின் மதிப்பு இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.