வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் திருவிழா: நடைமுறைகள் தொடர்பான அறிவித்தல் வெளியீடு
யாழ்.நல்லூர் கந்த சுவாமி ஆல திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதற்கமைய, நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் நடைமுறைகள் தீர்மானங்கள் தொடர்பில் மாநகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.
இக்கூட்டத்தில் பெருந்திருவிழா வெளியேற்பாடுகள் தொடர்பாக பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளதாக ஆணையாளர் தெரிவைத்துள்ளார்.
அறிவித்தலில், 1. ஆலயச் சூழலில் வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகள் 07.08.2024 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 04.09.2024 நள்ளிரவு வரை ஆலய வெளி வீதியின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.
2. பிரதான வீதித்தடைகள் பருத்தித்துறை வீதியில் மாநகர சபைக்கு முன்புறம் அரசடிச்சந்தி, கோயில் வீதியில் சங்கிலியன் வீதி சந்தி, பிராமணக்கட்டு குள வீதிச்சந்தி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.
சுகாதார பாதுகாப்பு தேவைகளிற்கேற்ப மேற்படி வீதித்தடைகளின் அமைவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.
3. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல இம்முறையும் மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் வழமைபோல் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்னால் உள்ள குறுக்கு வீதியால் பயணித்து நாவலர் வீதி ஊடாக ஆனைப்பந்தி சந்தியை அடைந்து யாழ் நகரை அடைய முடியும்.
யாழ் நகரில் இருந்து திரும்பும் வாகனங்கள் அதே பாதை ஊடாக பருத்தித்துறை வீதியை அடைய முடியும். விசேட பெருந்திருவிழாக்களின் போது முத்திரைச்சந்தியில் திரும்பி கச்சேரி நல்லூர் வீதி ஊடாக நாவலர் வீதியை அடைந்து பயணிக்க முடியும்.
கோயில் வீதி வழியாக வரும் வாகனங்கள் சங்கிலியன் வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்தும், செட்டித்தெரு ஒழுங்கையூடாக பருத்தித்துறை வீதியை அடைந்து பயணிக்க முடியும்.
4. தூக்குக் காவடிகள் வழமை போல் பருத்தித்துறை வீதி வழியாக உள் நுழைந்து ஸ்ரீ முருகன் தண்ணீர் பந்தலில் காவடிகள் இறக்கி டிரக்டர்கள் செட்டித்தெரு வீதியூடாக வெளியேற வேண்டும்.
5 .ஆலய வீதிச்சூழலில் வீதித்தடைகளுக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார 5 நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமை போல வாகன அனுமதி அட்டை மாநகர சபையால் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிரந்தர வியாபாரிகள் பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
6. உற்சவ காலங்களில் சிறுவர்களைக் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது.
7. ஆலயச் வெளி வீதி குழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது. 8. வேண்டும். உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பொலித்தீன் பாவனை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
9. உற்சவ காலங்களில் ஆலய வெளி வீதி சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
10. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்.
11.உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விமைரங்கள் மற்றும் துண்டுப் பிரகரங்களி கடவுள் திருவுருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
12. ஆலயச் சூழலில் ட்ரோன் (Drone) கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்யவது தவிர்க்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நடவடிக்கைகளுக்கு அமைவாக நல்லூர் பெருந்திருவிழா நடைபெறுவதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.