ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டால் முறைப்பாடு அளிப்பது தொடர்பில் வெளியான தகவல்

ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டால் முறைப்பாடு அளிப்பது தொடர்பில் வெளியான தகவல்

பெண்களிடம் இருந்து ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டால் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை முன்னிலைப்படுத்துவதில் ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனடிப்படையில், ஒரு ஆணோ அல்லது சிறுவனோ ஏதேனும் தகாதமுறை நடவடிக்கைகளுக்கு உள்ளானால் அவர் தயக்கமின்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும் போது காவல் நிலையங்களில் வயது முதிர்ந்த பெண்களால் ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.