அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு: ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு: ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

இளைஞர்ளுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வலம்புரி ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஒருபோதும் மறக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு: ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Private And Government Job Vacanciesகொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என்றும், அதனால் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இவ்வருடம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் ஆசிரியர் சேவையில் புதியவர்களை இணைத்துக் கொள்வதற்கு அடுத்த வருடம் மேலதிக நிதியை வழங்கவுள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு: ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Private And Government Job Vacancies

அத்துடன், சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு நிவாரணத்துடன் கூடிய கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் இணைந்து இளைஞர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யுமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.