கையூட்டு பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் அதரிடி கைது

கையூட்டு பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் அதரிடி கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று (02) வத்தளை (Wattala), மஹபாகே நீதிமன்ற வாகன தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது தொடர்பாக மேலும் தெரியவருகையில், உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி யுக்திய நடவடிக்கையின் போது முறைப்பாட்டாளரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த உத்தியோகத்தர்150,000 ரூபா இலஞ்சம் பெற்றநிலையில் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கையூட்டு பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் அதரிடி கைது | Police Sergeant Arrested For Briberyஅதன்படி, மஹபாகே காவல்துறை போக்குவரத்து பிரிவின் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.