திரைப்பட பாணியில் நடத்தப்பட்ட பயங்கர கொலை: கனரக வாகன சாரதி கைது

திரைப்பட பாணியில் நடத்தப்பட்ட பயங்கர கொலை: கனரக வாகன சாரதி கைது

குடும்பஸ்தர் ஒருவரை மின்கம்பத்தில் மோதி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கனரக வாகன சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு (02) கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை (Balangoda) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பலாங்கொடை நகரில், சந்தேகநபரான சாரதி மோட்டார் சைக்கிள் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

விபத்தில் சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையில், சிறுமியின் தந்தை மோட்டார் சைக்கிளில் குறித்த கனரக வாகனத்தை துரத்திச் சென்று பக்கவாட்டில் உள்ள கதவில் ஏறி சந்தேகநபரான சாரதியை கீழே இறக்க முயன்றுள்ளார்.

திரைப்பட பாணியில் நடத்தப்பட்ட பயங்கர கொலை: கனரக வாகன சாரதி கைது | Heavy Vehicle Driver Escaped After Murder Arrestedஅதன் போது, சந்தேகநபரான சாரதி கனரக வாகனத்தை மின்கம்பத்தில் மோதி, சிறுமியின் தந்தையை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கனரக வாகனம் அடையாளம் காணப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் படி, சந்தேக நபர் இன்றையதினம் (03) பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.