யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரம்பா கணவர்
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்துள்ள தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா அவரது கணவரின் பிறந்தநாளை தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலருடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
அவர், தனியார் விமானம் ஒன்றின் ஊடாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
இந்நியைில், ரம்பா குடும்பத்தினரால் யாழில் நடத்தப்படுகின்ற தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய, அவர் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளதுடன் தனது கணவரின் பிறந்த நாளையும் கொண்டாடியுள்ளார்.