பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ஜூலை மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜூன் 2024 இல் 1.7 சதவீதமாக பதிவாகியிருந்தது.

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Inflation Is On The Rise Againஇதேவேளை ஜூன் 2024 இல் 1.4 சதவீதமாக நிலவிய உணவு வகையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை 2024 இல் 1.5 சதவீதமாக உயர்ந்ததுள்ளது.

மேலும், கடந்த மாதம் 1.8 சதவீதமாக காணப்பட்ட உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.