தேயிலைத் தோட்டங்களுக்கு 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள மானியத் தொகை

தேயிலைத் தோட்டங்களுக்கு 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள மானியத் தொகை

தேயிலைத் தோட்டங்களுக்கு உரமிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த மானியத் தொகையான 2000 ரூபாவை 4000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானம் இன்று (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2000 ரூபா மானியமாக வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் பருவத்தில் இருந்து இந்த உரத்திற்கு மானியம் வழங்கப்படவுள்ளதுடன், தேயிலை உரத்தின் விலையை மேலும் 2000 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.