தங்க விலையில் சடுதியான அதிகரிப்பு : இன்றைய நிலவரம்
தங்கத்தின் விலையானது உலக சந்தையில் (World Market) நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
எனினும் இலங்கையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (29.07.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலையானது 727,113 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,650 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 205,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,520 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 188,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,450. ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 179,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 194,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 196,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.