அதிகரிக்கும் மழைவீழ்ச்சி ; வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி ; வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

சப்ரகமுவமாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி ; வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் | Northern Province Today Weather Of Srilanka

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.