கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து... பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
கொழும்பு, மாலம்பே - ஹோகந்தர பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணோருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் நேற்றையதினம் (27-07-2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது

விபத்தில் படுகாயமடைந்த பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.