நீரில் மூழ்கி பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த அனர்த்தங்கள் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பலோகம கலா ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உருகுடா வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, எஹட்டுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட மகுலேவ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹெட்டிகம, மகுலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.