புனித ஹஜ் பெருநாள் இன்று..!

புனித ஹஜ் பெருநாள் இன்று..!

இஸ்லாமியர்கள் இன்று ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

ஹஜ் பெருநாளின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் கொவிட்- 19 நோய்த் தொற்றுக்கு மத்தியில் இம்முறை வழமை போன்று மக்காவுக்கான யாத்திரைக்கு முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத போதும், அந்த யாத்திரையின் மூலம் வெளிப்படுத்தப்படும் இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.