பராகுவேயில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 396 பேர் பலி (01-08-2004)

பராகுவேயில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 396 பேர் பலி (01-08-2004)

பராகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 396 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நான்சாங் என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது. * 1936 - பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

 

பராகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 396 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


*  1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நான்சாங் என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

*  1936 - பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

*  1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

*  1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

*  1952 - தந்தை பெரியார் ரெயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

*  1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

*  1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது

*  1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

*  1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

*  1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற ரெயில் விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

*  2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

*  2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

*  2007- யாழ்பல்கலைக்கழக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்