தொடர் வீழ்ச்சி காணும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தொடர் வீழ்ச்சி காணும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

உலக சந்தையில் (World Market) தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

எனினும் இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது தற்போது தொடர்ச்சியாக குறைவடைந்து செல்கின்றது. 

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய (26.07.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலையானது 722,082 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,480 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 203,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர் வீழ்ச்சி காணும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Todat Gold Rate In Sri Lanka And World Marketஅதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,360 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 186,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,300. ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 194,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர் வீழ்ச்சி காணும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Todat Gold Rate In Sri Lanka And World Marketஇதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 179,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.