மாணவர்களுக்கான சீருடை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

மாணவர்களுக்கான சீருடை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

இந்தவிடயத்தை, ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த வருடத்திற்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான சீருடை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் | Ministry Of Education Step Provide School Uniform

அத்தோடு, பிரதான நிலை தேசியப் பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து பாlடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

தென் கொரியாவின் கொய்கா நிறுவனம் 85 பில்லியன் டொலர்களை சாகாரா பல்கலைக்கழகத்திற்கு வழங்க உள்ளது மேலும் 2700 உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட் பலகைகளை பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முழு பாடசாலை வலையமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவது அரசின் திட்டமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.