தென்னிலங்கையில் அதிகாலையில் பரபரப்பு ; முச்சக்கரவண்டிக்குள் மீட்கப்பட்ட சடலம்

தென்னிலங்கையில் அதிகாலையில் பரபரப்பு ; முச்சக்கரவண்டிக்குள் மீட்கப்பட்ட சடலம்

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம் பொலிஸாருக்கு மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் அதிகாலையில் பரபரப்பு ; முச்சக்கரவண்டிக்குள் மீட்கப்பட்ட சடலம் | Dead Body Recovered From A Tricycle In Clombo

பின்னர் குறித்த முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்திய விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் வினவியபோது, ​​முச்சக்கரவண்டியை 33 வயதுடைய தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த வழங்கியதாக அவர் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.