மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

சிறுவர்கள் மத்தியில் ஆஸ்த்துமா மற்றும் சுவாச நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்புளுவென்சா மற்றும் சாதாரண வைரஸ் தொற்று என்பன தற்போது பரவி வரும் நிலையில், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் | Instructions To Sri Lankans To Wear Masksதற்போதைய காலத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவி வருவதால், அனைவரும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.  

இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதால் குறித்த வைரஸ் தொற்று பரவலடைவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனவும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீரிழிவு நோய் தொடர்பில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.