சந்தையில் எரிவாயு விலையில் மாற்றம்

சந்தையில் எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இயற்கை எரிவாயு விலை இன்றைய தினம் (20.7.2024) 2.13 அமெரிக்க டொலராக (US dollars) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  

இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.13 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது.