அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் செயற்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரச உத்தியோகத்தர்கள் சட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் | Important Announcement From Goverment Staffs 

மேலும்,சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமல் சில அதிகாரிகள் செயற்படுவதால் அங்கு மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.