அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது இன்று (19) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் கூறியுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ உளுந்து 1,400 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா 910 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மா 180 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி 260 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கீறி சம்பா அரிசி 258 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.