வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி : பல்கலைக்கழக ஊழியர் கைது

வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி : பல்கலைக்கழக ஊழியர் கைது

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (Eastern University) அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி : பல்கலைக்கழக ஊழியர் கைது | Officer Of Eastern University Arrested Money Fraudஇந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது அவரை வழிநடத்திய பிரதான குற்றவாளியாக குறித்த பல்கலைக்கழக ஊழியரே காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண் பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை தற்போது கைதாகியுள்ள சந்தேகநபரான பல்கலைக்கழக ஊழியரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.

இந்தநிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பல்கைலைக்கழக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.