பாலியல் துஷ்பிரயோக வழக்கில் நபர் ஒருவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை..!

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் நபர் ஒருவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை..!

சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வெலிவேரிய பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஒரு குற்றச்சாட்டுக்கு 5000 ரூபா படி 10,000 ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்குமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு அந்த சந்தர்ப்பத்தில் 15 வயது எனவும் குற்றவாளிக்கு 21 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இருவரும் காதலர்கள் எனவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட யுவதிக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.